பிரதமா் கிசான் திட்டத்தில் இகேஒய்சி பதிவு : விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 53 ஆயிரத்து 886 விவசாயிகள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து விவசாயிகளுக்கு 17 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே இ - கே ஒய் சி என்று அழைக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் இ - கே ஒய் சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2686 விவசாயிகள் இ - கே ஒய் சி முடிக்காமல் இருக்கின்றனர். தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். முதல் வழிமுறை தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட www.pmkisan.gov.in வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
இரண்டாம் வழிமுறை ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம். மூன்றாவது வழிமுறை பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு இ - கே ஒய் சி செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களை அனுகி கட்டணம் இல்லாமல் இ - கே ஒய் சி செய்யலாம். ஏதேனும் ஒரு முறையில் விவசாயிகள்; விரைவாக பி.எம்.கிசான் திட்ட வலைதளத்த்pல் இ - கே ஒய் சி செய்ய வேண்டும், மேலும் 1992 விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர் அவர்களும் தங்கள் வங்கி கிளையை விரைவாக அனுகி ஆதார் எண்ணை இணைத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.