நீம் பவுண்டேசன் சார்பில் தூத்துக்குடியில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் உயரிய நோக்கத்துடன் பணி செய்து வரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிக்காக தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மில்லர்புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பயிற்சியின் துவக்கத்தில் நீம் ஒருங்கிணைப்பாளர் பொன் இந்திரா அனைவரையும் வரவேற்றார். நீம் திட்ட இயக்குநர் நிமிஷா பயிற்சியின் நோக்கம் மற்றும் அவசியம் குறித்து விளக்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் பள்ளி செல்லா மற்றும் இடை நிற்றல் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கூடலிங்கம் அவர்கள் இடை நிற்றல் குழந்தைகளுக்கான பணிகள் குறித்தும், அக்குழந்தைகளை மீட்டெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது எப்படி என்றும் விளக்கமாக பயிற்சியளித்தார்.தொடர்ந்து நீம் பவுண்டேசன் நிறுவுனர் எழுத்துகள் வாசிக்க, எழுத தெரியாத காரணத்தினால் எந்தவொரு குழந்தையும் பள்ளியில் இருந்து வெளியேற கூடாது என்பதால் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தந்து உருவாக்கி வருகிறோம் என்பதை விளக்கி பேசினார். நீம் திட்ட ஆவணக் காப்பாளர் சிந்தியா நன்றியுரை கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீம் திட்ட இயக்குனர் நிமிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் பொன் இந்திரா, மணி ஐஸ்வர்யா, சரண்யா, அபிநயா மற்றும் நீம் தன்னார்வ ஆசிரியர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

வீடியோவாக கண்டுகளிக்க...