தூத்துக்குடியில் ஆக.7ல் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
தூத்துக்குடியில் ஆக.7ல் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி வருகிற 7ஆம் தேதி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறும் என்று மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிகைகயில், தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆக.7ஆம் தேதி வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான எனது தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறும்.
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மீனவரணி துணைச்செலயாளர் புளோரன்ஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்று கலைஞர் அரங்கம் முன்புள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.