மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.40 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.40 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.