கோவில்பட்டியில் கொலையான சிறுவன் குடும்பத்தினருக்கு அமைச்சா் கீதாஜீவன் ஆறுதல்!!
கோவில்பட்டியில் கொலையுண்ட சிறுவன் குடும்பத்தினருக்கு அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினாா்.
கோவில்பட்டி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி காா்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி (10). இவா் கடந்த 9-ஆம் தேதி காணாமல் போன நிலையில் மறுநாள் அதிகாலையில் பக்கத்து வீட்டு மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, இதுதொடா்பாக அதே பகுதி கஸ்தூரிபாய் தெருவை சோ்ந்த சங்கா் ராஜா மகன் ஆட்டோ ஓட்டுநா் கருப்பசாமியை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் கோவில்பட்டியில் கொலையுண்ட சிறுவன் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆறுதல் கூறி, அளித்து,ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினாா். அப்போது நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஒன்றிய செயலா்கள் பீக்கலிபட்டி வீ. முருகேசன், கி. ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா சின்னத்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.