தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்: மேயர் ஜெகன் வழங்கினார்!
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை மேயர் ஜெகன் வழங்கினார்.
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதிகளின் நிலை என்ன என்பதை கண்காணிக்கப்பட்டு 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கையுறை பாதுகாப்பு உடைகள் உபகரணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.