வல்லநாட்டில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் பிறந்த நாள் விழா!

வல்லநாட்டில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் பிறந்த நாள் விழா!

வல்லநாட்டில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் பிறந்த நாள் விழா!

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 254 பிறந்த நாள் விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா முன்னிலையில் புதனன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலிச் சீமை தந்த தீரம் மிக்க வீரன் வெள்ளையத் தேவன். நெஞ்சுரமும், போர்த்திறனும், நல்ல உடல் கட்டும், பேரழகும், கொண்ட வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். அடங்காத காளை ஒன்றை வெள்ளையம்மாள் என்ற பெண் வைத்திருந்தாள். வெள்ளையைத் தேவன் அக்காளையை அடக்கி வெள்ளையம்மாளை மணந்து கொண்டார். இந்த நிலையில் தான் பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான் போர் தொடங்கியது. போருக்குப் புறப்படும் போது வெள்ளையத்தேவனும் வெள்ளையம்மாளும் புதுமணத் தம்பதிகள். அப்போதுதான் வெள்ளையம்மாள் கருவுற்றிருந்தாள். போருக்கு முதல் நாள் தீய கனவுகளைக் கண்டாள். இதனால் மறுநாள் பேருக்குக்குப் புறப்பட்ட கணவனை போக வேண்டாம் எனத் தடுது;துப் பார்த்தாள். கெட்ட கனவுகள் வந்தது. எனவே என்னை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.

வெள்ளையத் தேவன் பிடிவாதமாக மறுத்துவிட்டு பகைவருக்கும் ஒரு உயிர்தானே அவனிடம் வாய்தாவா கேட்க முடியும்? மறவர்குல மங்கை போருக்கு கணவன் புறப்டும்போது அழலாமா? சிரித்துக்கொண்டு வழியனுப்பு வெள்ளையம்மா என ஆறுதல் சொல்லி விட்டுப் போருக்குப் புலி எனப் புறப்பட்டார். போர் உக்கிரமாக நடந்தது. வெள்ளையத் தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களைவேட்டையாடிக் கொன்றான். கோட்டையை பலமாக காவல் காத்தான். இவனது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் யாரிவன் என்று கேட்க வெள்ளையத் தேவன் என்றனர் ஆங்கிலேயச் சிப்பாய்கள். தந்திரமாக வெள்ளையத் தேவனைக் கொன்று விட்டு கட்டபொம்மு ராஜாவை கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினர். போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெள்ளையத் தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டு விட்டான்.

இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தான். கணவன் இறந்த செய்தி கேட்டு ஓடி வந்து போர்க்களத்தில் தலைவிரி கோலமாக ஒப்பாரி வைத்தாள் வெள்ளையம்மாள். கணவன் உடலைப் பார்த்துக் கதறி அழுத அவள் போர் முறைக்கு மாறாகத் தன் கணவனைக் கொன்று விட்ட கயவனைத் தேடிப்போனாள். பதுங்கிப் பதுங்கிப் போன அவள் எதிரிகளின் பாசறைப் பக்கம் போனபோது ஆங்கிலேயச் சிப்பாய்கள் குடிபோதையில் உளறிக் கொண்டிருந்ததையும் அதில் இருந்த ஒருவனே வெள்ளையத் தேவனைச் சுட்டவன் என்பதையும் அறிந்த வெள்ளையம்மாள் அவனைக் குத்திக் கொன்று விட்டு வெள்ளைத் தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள்.

இத்தகைய வீரமிக்க போர்படை தளபதியாக திகழ்ந்த வீரன் வெள்ளையத்தேவன் அவர்களுக்கு அவர் பிறந்த நாளான மே 31 ஆம் நாள் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் - வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் 254 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் ,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா , மாவட்ட வருவாய் அலுவலர் .ச.அஜய் சீனிவாசன் , உதவி ஆட்சியர் .கௌரவ் குமார்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சே.ரா.நவீன் பாண்டியன் , திருவைகுண்டம் வட்டாட்சியர் .சிவகுமார் , கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு கோமதி , வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா ஆகியோர் அண்ணாரது திருவசிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாராகள் திருமதி.சி.சின்னத்தாய் மற்றும் திரு.ஏ.மாரிமுத்து ஆகியோர்க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.