தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்.4 ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!!
தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதிகளில் பிப்ரவரி. 4 ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதிகளில் பிப்ரவரி. 4 ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக செயற்பொறியாளர் முத்துராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்;
“விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் 04.02.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், விளாத்திகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 08.00 மணி முதல் 17.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”.
“குளத்தூர் உபமின் நிலையத்தில் 04.02.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், குளத்தூர்; உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர்; அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 08.00 மணி முதல் 17.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”.
“சூரங்குடி உபமின் நிலையத்தில் 04.02.2023 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், சூரங்குடி உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 08.00 மணி முதல் 17.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”. என தெரிவிக்கபட்டுள்ளது.