என் டி பி எல் அனல் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் நாளை அரை நிர்வாண போராட்டம் : 7 சுற்று பேச்சுவார்த்தை தோல்வி!!

தூத்துக்குடி என்டிபிஎல் அனன்மன் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் நாளை அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி தெர்மல் நகரில் மத்திய அரசின் கீழ் செயல்படும் என் டி பி எல் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 2 அலகுகள் மூலம் சுமார் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 1400க்கும் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் நடத்தினர். பின்னர், போராட்டம் நடத்தியதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 3ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், என்எல்சி நிர்வாகம் மற்றும் என் டி பி எல் நிர்வாகம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்காமல் நீதிமன்றம் அறிவித்த ஊதிய உயர்வை அமல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது..
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரம் மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.. நிர்வாகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகளிடம் 7 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
20 ஆவது நாளாக தொடரும்
இப்போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல தலைவர் எஸ்.அப்பா துரை தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.
இதில் சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் பேச்சி முத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு தெர்மல் செயலாளர் கணபதி சுரேஷ் , என் டி பி எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், குணா, தமிழ்ச்செல்வன், ராம் குமார், கிருஷ்ணன் , முருகன், தொமுச சார்பில் NTPL சங்க , நிர்வாகிகள் முத்து ராஜ் சுந்தர், முத்து சாமி, சுடலை முத்து, சங்கர், இமான், சாமி கணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரை நிர்வாண போராட்டம்
மதுரையில் தொழிலாளர் நலதுறை அலுவலகத்தில் மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற 7ஆவது சுற்று பேச்சு வார்த்தையில் நெய்வேலியில் இருந்து உயர் அதிகாரிகள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை வேலை நிறுத்தம் தொடர்கிறது. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து புதன்கிழமை அரை நிர்வாண போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்
தனர்.