குடியரசு தினத்தன்று குரும்பூரில் சட்டவிரோத மது விற்பனை – 2 பேர் கைது, 56 பாட்டில்கள் பறிமுதல்

குடியரசு தினத்தன்று குரும்பூரில் சட்டவிரோத மது விற்பனை – 2 பேர் கைது, 56 பாட்டில்கள் பறிமுதல்

குரும்பூர் பகுதியில் குடியரசு தினத்தன்று சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், குரும்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் அம்மன்புரம் பகுதியில் ரோந்து வந்தபோது அம்மன்புரம் கிழக்கு தெருவை சார்ந்த கண்ணன் மகன் ராமஜெயம் மற்றும் கணபதி மகன் செல்லதுரை ஆகியோர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். 

அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்களிடம் சட்டவிரோதமாக இருந்த 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  எனவே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மேற்படி இரண்டு நபர்களையும் குரும்பூர் போலீசார் கைது செய்தனர்