ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்து – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்து – படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரரான முருகேசன் கார் விபத்தில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (மார்ச் 5) காலை முருகேசன் மதுரையை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மதுரை ஒத்தக்கடை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் முருகேசன் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.