மின்சாரம் தாக்கி ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

மின்சாரம் தாக்கி ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஷிப்பிங் கம்பெனி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி சவேரியாபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாலசுப்பிரமணியன் (34), இவர் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.