தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, ஊராட்சி செயலர், வருவாய் கிராம ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் தாலூகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி கிளை செயலாளர் ம.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் கமலூத்தின் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸ் லிகோரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் டெரன்ஸ், ஓட்டப்பிடாரம் கிளை செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட கிளை பொருளாளர் மாடசாமி நன்றியுரை ஆற்றினார்.