ஆத்தூர் பேரூராட்சி முன்பு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்!

ஆத்தூர் பேரூராட்சி முன்பு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்!

ஆத்தூர் பேரூராட்சி முன்பு விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்!

ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், 2021-இல் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்து பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான திட்ட வடிவங்களை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செப்டம்பர் 13 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டது.  இதில், சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களும், மாநிலத்தில் 14 மாநகராட்சியில் ஒரு மண்டலமும், 7 நகராட்சியில் ஒரு மண்டலமும், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கட்டமைப்பு, பற்றாக்குறை, ஏழ்மை ஆகிய தரவுகளின் அடிப்படையில் வேலை கொடுக்கப்பட்டு வந்தது.  

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அரசு நிதி ஒதுக்காததால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வேலையின்றி, வருமானம் இன்றி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  எனவே, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு 1000 கோடி நிதி ஒதுக்கி தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. 

இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி அட்டை வைத்துள்ள பயனாளர் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கிட கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் துவக்கக் கோரி அதிகாரிகளிடம் மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்து, மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட உதவி தலைவர் காசி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சாத்தான்குளம் பாலகிருஷ்ணன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர்புலிராஜ், சிபிஎம் கிளை செயலாளர் முத்தையா, சிஐடியு போக்குவரத்து குமார குருபரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கசமுத்து, சாதுலிங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நொச்சிக்குளம் செந்தூர்பாண்டியன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முத்து உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.