தனிநபர் கடன் ரூ.30 இலட்சம் வழங்கப்படும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு தனிநபர் கடன் அதிகபட்சமாக ரூ.30.00 இலட்சம் வரை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர், சமணர், பார்சியர் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன் அதிகபட்சமாக ரூ.30.00 இலட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு ரூ.10.00 இலட்சம் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் 15.00 இலட்சம், கல்விக்கடன் 20.00 இலட்சம் முதல் 30.00 இலட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன்: இத்திட்டத்தில் ரூ.20.00 இலட்சம் வரையில் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும், ரூ.20.00 இலட்சத்திற்கு மேல் ரூ.30.00 இலட்சம் வரையில் பெண்களுக்கு 6% மற்றும் ஆண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் தனிநபர் கடன் வழங்கப்படும்.
சுய உதவிக்குழு கடன்: இத்திட்டத்தில் ஒரு குழுவிற்கு உச்சபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையில் கடன் வழங்கப்படும். ஒரு உறுப்பினருக்கு ரூ.1.00 இலட்சம் வரையில் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்திலும், ரூ.1லட்சத்திற்கு மேல் ரூ.1.50 இலட்சம் வரையில் பெண்களுக்கு 8% மற்றும் ஆண்களுக்கு 10% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.
கைவினைஞர்களுக்கான கடன் (விராசாட்): கைவினை கலைஞர்களுக்கு அதிக பட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.10.00 இலட்சம் வரை பெண்களுக்கு 4% மற்றும் ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
கல்விக்கடன்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை/தொழிற்கல்வி தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு, ஆண்டிற்கு ரூ.4.00 இலட்சம் வீதம் 5 வருடங்களுக்கு அதிகபட்சம் ரூ.20.00 இலட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும், வெளிநாடுகளில் பயில்பவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.6.00 இலட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.30.00 இலட்சம் வரையில் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.
தகுதிகள்: மேற்படி கடன்கள் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/- மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கடன் தொகை ரூ.20.00 இலட்சத்திற்கு மேல் பெற விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-ற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம்: தூத்துக்குடி மாவட்டத்தில, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று, அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மத்திய/நகர/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
சான்றுகள்: கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டைஅல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம்/திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்). கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (டீழயெகனைந ஊநசவகைiஉயவந), கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசிது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.
வெண்மைப்புரட்சி ஏற்படுத்தும் வகையில் கறவை மாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இக்கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.