நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து மாணவர் சங்கம் சார்பில் மனித சங்கிலி!
நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது.

தூத்துக்குடி வ உ சி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் வ உ சி கல்லூரி கிளை சார்பில் சமத்துவத்திற்கான மனித சங்கிலி இயக்கம் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர் மற்றும் அவரது சகோதரியை சக மாணவர்கள் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் சமத்துவத்திற்கான மனித சங்கிலி ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் நடத்த அறைகூவல் விடுத்தது அதன் அடிப்படையில் தூத்துக்குடி வ உ சி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் சமத்துவத்திற்கான மனித சங்கிலி இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவர்கள், சாதி, மத, இன, மொழி, பாலின வேறுபாடின்றி மாணவர்களாய் ஒன்றிணைவோம் ... வேற்றுமை உணர்வை தகர்க்க அனைவரும் கைகோர்போம்..என மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் வ உ சி கல்லூரி கிளை நிர்வாகிகள் ஆசை தம்பி, ராஜ் பிரவீன் ,மாடசாமி, மாதவன் ,பட்டு ராஜா, முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு நிர்வாகி செல்வின் ,அலெக்ஸ் உட்பட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.