அரசு பஸ்களில் யூபிஐ செயலி மூலம் டிக்கெட் எடுப்பதில் சிக்கல் - நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!!

அரசு பேரூந்துகளில் UPI, G-Payசெயலி மூலம் டிக்கெட் பெறுவதில் ஏற்படும் பெரும் சிக்கலை சரி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேரூந்துகளில் UPI, G-Payசெயலி மூலம் டிக்கெட் பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அதாவது டிக்கெட் பெருவதற்கு QR code Scan செய்து பணம் அனுப்பும் போது பயணிகள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிந்து விடுகிறது ஆனால் டிக்கெட் மெஷினில் இருந்து பயணச்சீட்டு வருவதில்லை.
நடத்துனர் எனது மிஷினில் பணம் ஏறினால் தான் டிக்கெட் வரும். எனவே நான் ஒன்றும் செய்ய இயலாது என்றும் பணம் கொடுத்து டிக்கெட் பெறுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பயணிகள் சொல்லொண்ணா துயரத்திற்கும் மன உளச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வரும் என்கிறார்கள் ஆனால் வருவதில்லை. இதனால் தமிழக அரசு பேருந்தில் அறிமுகப்படுத்திய GPay மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருந்தும் இது குறித்து போக்குவரத்துக் கழகம் தெளிவான நடைமுறையை மக்களுக்கு தெரியப்படுத்தாததால் மக்கள் அதிர்ப்தியில் உள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பயணிகளின் வங்கிக் கணக்கில் கழிந்த பணத்தை திரும்பத் தர சிறப்பு கவுண்டர்களை உருவாக்க வேண்டும். பேருந்து செல்லும்போது இன்டர்நெட் சரிவர கிடைக்காது. அது போல் பல மண்டலங்களை சோந்த பல டெப்போக்களின் பேருந்துகள் வருகின்றன பணத்தை திரும்பப் பெற எந்த டிப்போ வை நாடுவது என்று தெரிவதில்லை.
குறைந்த தொகையை திரும்பப் பெற தேவையற்ற அலைச்சல் பண விரயம் ஏற்படுவதையும் கணக்கில் கொண்டு இந்த டிக்கெட் எடுக்கும் முறைக்கு மாற்றுவழி உருவாக்கு மாறும், பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்க தக்க ஏற்பாடு செய்யுமாறும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக் குழு சார்பில் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.