தூத்துக்குடி சிவன் கோவிலில் ரீல்ஸ், செல்ஃபி எடுக்க தடை..!

தூத்துக்குடி சிவன் கோவிலில் ரீல்ஸ், செல்ஃபி எடுக்க தடை..!

தூத்துக்குடி சிவன் கோவிலில் ரீல்ஸ், செல்ஃபி எடுப்பது மற்றும் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான சில முக்கிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி பக்தர்கள் லுங்கி, சார்ட்ஸ், நைட்டி போன்ற ஆடைகளை அணிந்து வர அனுமதி இல்லை. பிற மத அடையாள ஆடைகள் அணியக் கூடாது. கோயில் வளாகத்திற்குள் காலணிகள் அணியக் கூடாது. கோயில் வளாகத்தில் ரீல்ஸ், செல்ஃபி எடுப்பது மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தியுள்ளது.