என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி, மரனமடைந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பொறியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காததால் பலி, உரிய நிவாரணம் வழங்க கோரியும், அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பொறியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காததால் பலி, உரிய நிவாரணம் வழங்க கோரியும், அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்எல்சி தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் (என் டி பி எல்) அனல்மின் நிலையத்தில் 1200 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இதில் சுதாகர் என்பவர் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சுதாகர் கடந்த 21ஆம் தேதி இரவு அனல் மின் நிலையத்தில் பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு அனல் மின் நிலையத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஆபத்து காலங்களில் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத நிலை உள்ளது.
இதன் காரணமாக ஒப்பந்த ஊழியரான பொறியாளர் சுதாகர் என்பவர் உயிரிழந்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று என் டி பி எல் நிர்வாகம் ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் உயர்தர மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை பனி அமர்த்தபட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் என்டிபிஎல் அனல்மின் நிலையம் முன்பு என் டி பி எல் அனல் நிலைய திட்ட செயலாளர் அப்பா துரை தலைமையில், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து முன்னிலையில், ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என் டி பி எல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.