போலீசாரை அரிவாளால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு : நீதித்துறை நடுவா் விசாரணை!!

தூத்துக்குடியில் கொலை வழக்கு விசாரணைக்கு பிடிக்கச் சென்றபோது, போலீசாரை அரிவாளால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரை அரிவாளால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு : நீதித்துறை நடுவா் விசாரணை!!

தூத்துக்குடியில் கொலை வழக்கு விசாரணைக்கு பிடிக்கச் சென்றபோது, போலீசாரை அரிவாளால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் (35) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

தூத்துக்குடி தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயப்பிரகாஷை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, ஜெயப்பிரகாஷ் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்றார். 

உடனடியாக போலீசார் துப்பாக்கியால் ஜெயப்பிரகாசை சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தட்டப்பாறை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு அளித்த புகாரின் பேரில், ஜெயப்பிரகாஷ் மீது கொலை முயற்சி, கொடூர ஆயுதத்தால் தாக்குதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசி மிரட்டியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

நீதித்துறை நடுவா் விசாரணை

தொடர்ந்து ஜெயப்பிரகாசுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் ஓட்டப்பிடாரம் நீதித்துறை நடுவா்  ஜெயந்தி நேற்று விசாரணை மேற்கொண்டாா். பின்னர் போலீசார், கொலை முயற்சி வழக்கில் ஜெயப்பிரகாசை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிகிச்சைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.