போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி: எஸ்பி பரிசு வழங்கினார்!

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மற்றும் போட்டிகள் நடந்தது.
இதில் கலந்துகொண்டு சிறப்பாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு முதலிடம் பிடித்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்ஸி, 2-ம் இடம் பிடித்த மணியாச்சி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் 3-வது இடம் பிடித்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜாண் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்ட்டி ரவுடி டீம் காவல்துறையினர் குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் ரவுடிகளை கண்காணித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை மேம்படுத்த வேண்டும் என்றும, ரோந்து பணியின்போது காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தீபு, ஆறுமுகம் மற்றும் உதவி சூப்பிரண்டு மதன், பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.