தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, "தூத்துக்குடி துறைமுகத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிற பிஎஸ்ஏ சிகால் கண்டைனர் டெர்மினல் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை லேசிங் அன்லேசிங் மற்றும் பிரைம்மூவர் ஒட்டும் பணிக்கு பணியமர்த்தி வந்தது. 2019 ஆம் பிஎஸ்ஏ சிகால் மற்றும் வ.உ சி துறைமுக நிர்வாகத்துக்கு இடையிலான ராயல்டி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2019 ல் அளித்த தீர்ப்பிற்கு பிறகு லேசிங் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் நிறுத்தப்பட்டு அவ்வப்போது மட்டுமே வேலை வழங்கிய, குறைவான கூலி கொடுத்து சுரண்டி வருகிறது. 

இதனால் தங்கள் குடும்பங்களை பராமரிக்க முடியாமல் பாதிப்பு அடைந்த தொழிலாளிகள் நிர்வாகத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தியோடு தொழிலாளர் ஆணையரிடமும் பல்வேறு வழக்குகளை நடத்தி வருக்கிறார்கள். நிரந்தர தன்மையுடைய பணியில் இந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் அவ்வப்போது புதிய புதிய காண்ட்ராக்டர்களை நியமித்து அவர்களுக்கு பணித் தொடர்ச்சியுடன் வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் எதையும் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக இது குறித்து தொடர்ச்சியாக போராடியும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. எவ்விதம் பலனும் இல்லாத நிலையில் தற்போது பி எஸ் எஸ் சி கால் நிறுவனம் பணியில் இருந்த கான்ட்ராக்டரை மாற்றி விட்டு எவ்வித முன் அனுபவமும், நிர்வாக பின்புலமும் இல்லாத ஒரு நபரை கான்ட்ராக்ட் என்கிற பெயரில் புகுத்தியுள்ளது. 

இதனால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற அச்ச உணர்வின் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் பரிசீலனை செய்து பணிக்கொடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கான்ட்ராக்டர் மாறும் போது ஏற்கனவே வேலை பார்த்த காலத்திற்கான பணிக்கொடைக்கு நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு செட்டில்மெண்ட் பேசி தீர்வு காண வேண்டும்.

இது குறித்து தங்கள் தொழிற்சங்கங்களோடு பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு திடீரென உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் துறைமுக நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் துறையும் உரிய தலையீடு செய்து பிஎஸ்ஏ சிகால் நிறுவனம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என்று துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தனர். 

--------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :-

WHATSAPP GROUP LINK 2 :-

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :-