காமராஜ் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகம் முன்பு காமராஜ் கல்லூரியில் அரசு நிர்ணயத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட அதிக கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க நிர்வாகி நேசமணி தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ஶ்ரீநாத், கிஷோர், சதீஷ், சுரேந்திரன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் .