கயத்தாறு அருகே மது பணம் தர மறுத்த தாயை அரிவாளால் வெட்டி கல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

கயத்தாறு அருகே மது பணம் தர மறுத்த தாயை அரிவாளால் வெட்டி கல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தில் அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மது குடிக்கப் பணம் தர மறுத்த தாயை, மகன் அரிவாள்மனையால் வெட்டி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது, சுப்பிரமணியன் – பாக்கியம் தம்பதியரின் மகன் வேலுச்சாமி (32) மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ஜாமீனில் வெளிவந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் தாயிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, வீட்டிலிருந்த அரிவாள்மனையால் தாயை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் கீழே விழுந்த நிலையில் இருந்த தாயின் தலையில் பெரிய கல்லை தூக்கி வீசி தாக்கியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாக்கியத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த வேலுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.