தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணி இடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer, Chief Operating Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer, Chief Operating Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2023.
தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சியுடன் Financial Risk Management சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். Banking அல்லது Finance துறையில் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 மற்றும் 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.