தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பு - 4பேர் கைது!

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பு - 4பேர் கைது!

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியை சேர்ந்த லாம்பர்ட் மகன் எபனேசர் (26) என்பவர் கடந்த 06.09.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் எபனேசர் புகார் அளித்தார்

புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்  சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர்  சண்முகம், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வடக்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த கோட்டை கருப்பசாமி மகன் அஜித்குமார் (23), செந்தூர்பாண்டி மகன் ஈஸ்வரன் (42), ஜி.பி காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் குமார் (24) மற்றும் குறிஞ்சி நகரை சேர்ந்த மாரீசன் மகன் அருண்குமார் (25) ஆகிய 4 பேரும் எபனேசரை அரிவாளால் தாக்கி செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.