செய்தியாளர்களை அவதூறாக பேசிய கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து தர்ணா போராட்டம்

செய்தியாளர்களை அவதூறாக பேசிய கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து தர்ணா போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ,மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை செய்தி சேகரிப்பதற்காக சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வட்டாட்சியர் சரவண பெருமாள் செய்து சேகரிக்க விடாமல் தடுத்து அவதூறாக பேசியுள்ளார்.

இதை கண்ட மற்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது அனைத்து செய்தியாளர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செய்தியாளர்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டாட்சியர் சரவணபெருமாளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது த்தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தர்ணாவில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்களிடம் காவல்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சமாதான பேச்சு வார்த்தையில் , வட்டாட்சியர் சரவணபெருமாள் பத்திரிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தால் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.