அம்பேத்கர் பிறந்த நாள் விழா: ததீஒமு, வாலிபர், மாணவர் சங்கத்தினர் மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: ததீஒமு, வாலிபர், மாணவர் சங்கத்தினர் மரியாதை!

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் காசி, தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், தா. ராஜா, மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சொ.மாரியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் ஶ்ரீ நாத், நேசமணி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், நிர்வாகிகள் ராம்குமார், ஷாம், ராஜ், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

.