‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஒருநாளும் ஓடாது! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஒருநாளும் ஓடாது! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

“பிரதமர் நரேந்திர மோடி சொல் லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ ஒருநாளும் தமிழ்நாட்டில் ஓடாது!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையையொட்டி,  அவரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய மான கேள்விகளை எழுப்பியிருந்தார். 

“தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி சமக்ரசிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?; தொகுதி மறு வரையறையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற  உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து  எப்போது வரும்?; பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுந ரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மாநிலங்கள் மீது நிதிச் சுமை யை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வா தாரத்தை ஒழித்துக் கட்டும் ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டம் கைவிடப்படும்’ என்ற வாக்குறுதி எப்போது வரும்?; பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் (AIIMS) எனும்  எட்டாவது உலக அதிசயம் எப்போது  எங்கள் கண்முன் வரும்?” - என  இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எழுப்பி இருந்தார். 

ஆனால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காத பிரதமர் நரேந்திர மோடி, “பாஜக - என்டிஏ  டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே  ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம்” என கூறியுள்ளார். 

இந்நிலையில், பிரதமர் மோடியின்  இந்தப் பேச்சுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத் துள்ளார். சமூகவலைதள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’” எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடாது!” என்று முதலமைச்சர் கூறி யுள்ளார். 

பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத் தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரை விட, தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் ‘டப்பா எஞ்சின்’ நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட் டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது” என முத லமைச்சர் தெரிவித்துள்ளார்.