பொதுமக்கள் வணிகர்கள் மத்தியில் இன்சூரன்ஸ் நிறுவனம் தொழில் செய்ய முடியாத நிலையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை !!
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போடும்போது ஒரு பேச்சும் இழப்பீடு என்று செல்லும்போது ஒரு பேச்சும் பேசுவதாக தகவல் வருகின்றது இந்த போக்கை தொடருமானல் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் மத்தியில் இன்சூரன்ஸ் நிறுவனம் தொழில் செய்ய முடியாத நிலையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை
தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பேரிடர் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி, ஏரல், முக்கானி பழைய காயல், ஆழ்வார் திருநகரி, அஞ்சு கிராமம் ஆகிய பகுதிகளுக்கு, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2000 சிறு வணிகர்களுக்கு நிதி உதவிகளை புதன் மற்றும் வியாழக்கிழமை வழங்கியதாக தெரிவித்த அவர்,
தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் பல்வேறு வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.உதவிகள் செய்த தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பேரமைப்பு நிர்வாகிகளுக்கும் நன்றி. கூட்டுறவு வங்கிகள் மூலம் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு 5-லட்சம் கடன் உதவி வழங்க வேண்டும் அப்போதுதான் வணிகர்கள் மீண்டெழ முடியும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போடும்போது ஒரு பேச்சும் இழப்பீடு என்று செல்லும்போது ஒரு பேச்சும் பேசுவதாக தகவல் வருகின்றது இந்த போக்கை தொடருமானல் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் மத்தியில் இன்சூரன்ஸ் நிறுவனம் தொழில் செய்ய முடியாத நிலையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கும்.
கார்ப்பரேட் கம்பெணிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தியது வணிகர்கள் எனவே மழை வெள்ளத்தால் வணிகர்களின் பல்வேறு பொருட்கள் பாதிப்பு அடைந்துள்ளது எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் மாற்று பொருட்கள் வழங்க வேண்டும் அவ்வாறு தராத கார்ப்பரேட் நிறுவனங்களை கணக்கெடுத்து அந்த நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலையை தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சங்கம் உருவாக்கும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மத்திய அரசு முன்வந்து ஜிஎஸ்டி கட்டகூடிய அனைத்து வணிகர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி, மாவட்ட வணிகர்களுக்கு இஎம்ஐ மற்றும் கந்துவட்டியில் இருந்து ஒரு வருடம் விலக்கு அளிக்க வேண்டும என பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒரு பகுதியான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி வணிகர்களுக்கு மட்டும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து வருகின்றோம் ஆனால் நாங்கள் செய்யும் உதவி போதாது அரசும் வணிகர்களுக்கு உதவிகள் செய்தால்தான் மீழ முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் ஏரி,குளங்கள்,ஆற்றங்கரைகள் ஆகியவை உடைந்து காணப்படுகின்றது இதற்கு காரணம் மணல் அள்ளுவதே முழு காரணம் ஆகும் மேலும் சில பகுதிகளில் மதகுகள் சேதமடைந்துள்ளதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் எனவே அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி விவசாயிகளையும் வணிகர்களை-யும் காப்பாற்ற வேண்டும்.
மழை வெள்ளத்தில் பாதிப்பு அடைந்த சாமானிய மக்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்க மத்திய அரசு சிறப்பு தீர்மானம் ஏற்ற வேண்டும். வங்கிகள் கடன் வசூல் செய்யும் விசயத்தில் கட்டாயபடுத்த கூடாது அவ்வாறு செய்தால் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் வணிகர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் எனவே வணிகர்கள் வைத்திருக்ககூடிய கடைகளுக்கு அதன் கட்டிட உரிமையாளர்கள் குறைந்தது ஆறு மாதம் காலம் களித்து வாடகை வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு சார்பில் கேட்டுகொள்கின்றோம். என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாநில தலைமை செயலார் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், கன்னியாகுமரி மண்டலத்தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா, மாநில இணைச்செயலாளர் ஆர்.தசரதபாண்டியன் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.காமராசு , செயலாளர் டி.கண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொருளாளர் ஏ.ஏ.அருணாச்சலம், தென்சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.