தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மார்ச் 31ம் தேதிக்கு மாற்றம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை (மார்ச் 30)ல் நடக்கவிருந்த மாமன்ற கூட்டம் தேதி மாற்றம் செய்யபட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை (மார்ச் 30)ல் நடக்கவிருந்த மாமன்ற கூட்டம் தேதி மாற்றம் செய்யபட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
தூத்துக்குடி மாநகராட்சியின் 2023 -2024 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகின்ற 31. 3. 2023 வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்ய இருப்பதால் 30.03.2023 வியாழன் அன்று நடைபெறுவதாக இருந்த மாமன்ற சாதாரண கூட்டம் 31.3.2023 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.