தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட் பழுது..!!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட் பழுது..!!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட் பழுது..!!

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2 யூனிட்களில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதில் 5 யூனிட்டுகளில் நாள்தோறும் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர் பழுது, பராமரிப்பு பணிகள், கொதிகலனில் திடீர் பழுது காரணமாக அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல்மின் நிலையத்தில் 3 ஆவது மற்றும் 4 ஆவது யூனிட்டில் இன்று திடீரென பழுது ஏற்பட்டது. 

இதன் காரணமாக அந்த யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், தற்போது 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு யூனிட்களிலும் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் அனல் மின்நிலைய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 1 ஆவது 2 ஆவது மற்றும் 5 ஆவது யூனிட்டுகளிலும், பராமரிப்பு காரணமாக ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆவது யூனிட்டிலும் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.