தூத்துக்குடி: காலாவதி தேதி இல்லாமல் மக்ரூன் விற்பனை – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி: காலாவதி தேதி இல்லாமல் மக்ரூன் விற்பனை – உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல் கேட் அருகே செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டல் ‘லண்டன் கபே’யில் விற்பனை செய்யப்படும் மக்ரூன்களில் காலாவதி தேதி, உற்பத்தி தேதி மற்றும் அதிகபட்ச சில்லறை விலை (MRP) உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் விலை விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படுவது அவசியம். ஆனால், குறித்த ஹோட்டலில் இவ்விவரங்கள் இல்லாத மக்ரூன்கள் விற்பனை செய்யப்படுவது நுகர்வோரிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமையக்கூடும் என்பதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்பதும், உணவுப் பொருட்கள் விற்பனையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.