அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு தகவல் வெளியிட்ட வாலிபர் கைது!
சமூக வலைதளத்தில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு தகவல்கள் வெளியிட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளத்தில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு தகவல்கள் வெளியிட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் காலனியைச் சேர்ந்த முத்து மகன் நடராஜ் (38) என்பவர் சமூக வலைதளங்களில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளரான தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 1-வது தெருவைச் சேர்ந்த பிரபு (43) என்பவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி நடராஜை கைது செய்தார். அவர் மீது 294(b) 504,505(ii) மற்றும் 67 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.