தூத்துக்குடி சப்-ஜூனியர் ஹாக்கி அணித் தேர்வு கோவில்பட்டியில் 26ஆம் தேதி – தகுதி விவரங்கள் வெளியீடு

தூத்துக்குடி சப்-ஜூனியர் ஹாக்கி அணித் தேர்வு கோவில்பட்டியில் 26ஆம் தேதி – தகுதி விவரங்கள் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியர் மாணவர் மற்றும் மாணவியருக்கான ஹாக்கி அணித் தேர்வுகள் கோவில்பட்டியில் 26ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளன.

தமிழ்நாடு ஹாக்கி கழகம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள் மாணவர்களுக்கு ராமநாதபுரத்திலும், மாணவியருக்கு சிவகங்கையிலும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட அணிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மாவட்ட அளவிலான அணித் தேர்வுகள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானத்தில் காலை 6:30 மணிக்கு தொடங்கும்.

???? தகுதி விவரங்கள்:

• 1.1.2010-க்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.

• தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது இம்மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவராகவோ இருக்க வேண்டும்.

• ஆதார் அட்டை நகல் மற்றும் பள்ளி அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

இந்த ஏற்பாடுகளை ஹாக்கி கழக தூத்துக்குடி கிளைச் செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா மற்றும் மாவட்ட சப்-ஜூனியர் அணிப் பயிற்சியாளர்கள் அஸ்வின், வேல்முருகன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.