ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்: ஆட்சியர் தகவல்!
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(SSC), ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(SSC), ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தேர்வர்கள் சிறப்பான முறையில் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட்டு மூன்று மாத காலத்திற்கு நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. தற்போது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 7500 காலிப் பணியிடங்களுக்கான SSC CGL 2023 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9942503151 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரினை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் ஒன்றிய அரசு பணிக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.