தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில்கள் நேரம் மாற்றம் : ஆக.14 முதல் அமல்!

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லும் சில ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில்கள் நேரம் மாற்றம் : ஆக.14 முதல் அமல்!

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லும் சில ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சிறப்பு பயணிகள் ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 7.20-மணிக்கு பதிலாக, இரவு 8.25-மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இதே போன்று திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரயில் காலை 8.25-மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு நெல்லையை வந்தடைந்தது. இந்த ரயில் தற்போது காலை 8.15-மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் 10 மணிக்கு நெல்லையை வந்தடையும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக நேரம் மாற்றப்பட்டு உள்ளது. 

திருச்செந்தூரில் இருந்து 8.10-மணிக்கு புறப்பட்டு 2.40-க்கு திருச்சியை சென்றடைந்தது. இந்த ரயில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 2.40 மணிக்கு திருச்சியை சென்றடையும் வகையில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.