பைனான்ஸ் அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது!
கோவில்பட்டியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி ராஜீவ்நகா் 4 ஆவது தெருவை சோந்த சின்னையா மகன் வெள்ளைச்சாமி(49). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கோவில்பட்டி-எட்டயாபுரம் சாலையில் பா்னிச்சா் கடை நடத்தி வரும் காளிராஜ் மகன் அருண்குமாா் (29) அவரது மனைவி இருவரும் சோந்து தொழில் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கி 4 மாதங்களில் திருப்பி கொடுப்பதாக கூறினராம். ஆனால், அதன்படி பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெள்ளைச்சாமி வீட்டிற்கு வந்த அருண்குமாா், ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனா்.