கோரம்பள்ளம் நடைபயிற்சி கிளப்சார்பில் ரத்த தான முகாம்!

தூத்துக்குடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கோரம்பள்ளம் நடைபயிற்சி கிளப்சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசு தொழில் பயிற்சி நிலைய நாட்டு நலத்திட்ட பணி மாணவர்கள் மற்றும் கோரம்பள்ளம் நடைபயிற்சி கிளப் ஆகியவை இணைந்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் கலந்து கொண்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுமார் 60 யூனிட் ரத்தங்களை வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிர்ச்சி நிலைய முதல்வர் வேல்முருகன் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் நேவிஸ் அரசு மருத்துவர் சாந்தி நடை பயிற்சி கிளப் தலைவர் இ செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரத்த தானம் செய்த அமாணவர்களுக்கு கோரம்பள்ளம் நடைபயிற்சி கிளப் சார்பில் மதிய உணவும் வழங்கப்பட்டது.