ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை லாரிகள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது!

ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை லாரிகள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது!

ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை லாரிகள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை லாரிகள் மூலம் வெளியேற்றும் பணிகள் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக, ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு, ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர்  தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 21-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் சிப்சம் எடுப்பதற்கான  பணிகள் தொடங்கிய நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிகளாக இருந்த சிப்சத்தை தூளாக்கப்பட்டது.தற்போது இன்று  முதல் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக ஆந்திரா இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை-க்கு 1-லாரி சிப்சமும். விருதுநகர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கு 3-லாரி சிப்சமும் கொண்டு செல்லப்படுகிறது.