கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலை திறப்பு விழா
கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாப், வீரன் சுந்தரலிங்கம் வாரிசுதாரர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.