தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உட்பட ஒட்டு மொத்த மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு: மேயர் பதில் கூறிய சில நிமிடத்தில் வெளியேறிய திமுக கவுன்சிலர்....

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உட்பட ஒட்டு மொத்த மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு: மேயர் பதில் கூறிய சில நிமிடத்தில் வெளியேறிய திமுக கவுன்சிலர்....

கடந்த 46 மாதங்களாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்டங்களில் பல்வேறு வார்டு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த கூட்டத்தில் 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டத்தில் 

முன்வந்த ஒரு தீர்மானம் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மாநகராட்சிக்குட்பட்ட டோபிகானா வணிக வளாகத்தின் தரைத்தளத்தில், மாவட்ட மேலாளர் வழியாக டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை செயல்பட 500 சதுரடி பரப்பளவில் மாத வாடகை ரூ.12,000 + GST என நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. 

குறிப்பாக, அதே வளாகத்தில் உள்ள G3, G4, G5 கடைகளின் ஆரம்ப மாத வாடகை ரூ.13,250 + 18% GST (மொத்தம் ரூ.15,635) என இருந்த நிலையில், குறைந்த தொகையில் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து கேள்விகள் எழுந்தன.

மேலும், 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும் வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராத சூழ்நிலையில், இந்த ஒதுக்கீடு விவகாரம் அரசியல் விவாதமாக மாறியது. 

இதில், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, ராமகிருஷ்ணன், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  கண்டிப்பாக இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்றும் மாநகராட்சி சார்பில் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, 

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்  நிர்வாக ரீதியாக பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றும், உரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்