தூத்துக்குடியில் விசில் சின்னத்துக்கு வாக்களித்த வீடியோ வைரல்..! தேர்தல் விதிமுறை மீறல்.?

தூத்துக்குடியில் விசில் சின்னத்துக்கு வாக்களித்த வீடியோ வைரல்..! தேர்தல் விதிமுறை மீறல்.?

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குரிமையை பதிவு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக சார்பில் செல்லப்பாண்டியன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் ஶ்ரீநாத் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஶ்ரீநாத் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்கும் காட்சி கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக “tvk_50th_area” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

⚠️ தேர்தல் நடைபெறும் நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்வது மற்றும் வாக்களிக்கும் செயல்முறையை வீடியோ எடுத்து வெளியிடுவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானதாக கருதப்படுகிறது. இதனால், இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

???? இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

???? தற்போது இந்த வீடியோ தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை கிளப்பி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.