திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயன், தனது இரு மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்தினார். தொடர்ந்து மூலவர் முருகன், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.

சுவாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகார்த்திகேயனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,

“எனது 14 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை ரசிகர்கள் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பயணம் பல கஷ்டங்களையும் போராட்டங்களையும் கொண்டது. அவற்றை கடந்து மக்களின் அன்புதான் மனதில் நிலைத்திருக்கிறது. அடுத்து நடிக்கும் படங்கள் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் வகையிலும், அனைவருக்கும் பிடிக்கும் படங்களாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.