தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகேஷ் குமார் (37). பெயிண்டர். இவர் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வந்து கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் மகேஷ் குமாருக்கும் பாலா (எ) பாலமுருகன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக மகேஷ் குமாரை வெட்டிக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.