விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. முற்பகலில் சுவாமி-அம்பாள், சண்முகா் விமானங்களுக்கும், மூலவா் சுவாமி-அம்பாள், சண்முகா், பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு சுவாமி அம்மாள் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை விஸ்வகா்மா பொற்கொல்லா் சமுதாய மண்டகப்படிதாரா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.