கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மீன் குழம்பில் விஷம் வைத்து கொன்ற மனைவி!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மீன் குழம்பில் விஷம் வைத்து கொன்ற மனைவி!!

கடலூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கோபாலக்கண்ணன் (50) இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா (48), இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கோபாலக்கண்ணன், அதன்பின் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிய கோபாலக்கண்ணன் இன்று காலை எழுந்திரிக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு வந்த விஜயா தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி அவர் கிடந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாகவும் வந்து புகார் தெரிவித்தார் இந்த புகாரை அடுத்து குள்ளஞ்சாவடி போலீஸார் நேரில் வந்து விஜயாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கோபால கண்ணன் விஷம் சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதே நேரம் இந்த சம்பவம் குறித்து இறந்த கோபால கண்ணன் தந்தை ராதாகிருஷ்ணன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். தனது மகன் கோபாலக்கண்ணன் கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் சமையல் வேலை செய்து வந்தார். எனது மருமகள் விஜயாவுக்கும், எங்கள் ஊரைச் சேர்ந்த தேவநாதன்(57) என்பருக்கும் இடையே தகாத உறவு உள்ளது. இதுபற்றி அறிந்த நான், எனது மகனிடம் தெரிவித்தேன். இதையடுத்து, கோபாலக்கண்ணன் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் எனது மகனை கொலை செய்ய திட்டம் போட்டு, வீட்டில் சமைத்து வைத்திருந்த மீன் குழம்பில் விஜயா விஷத்தை கலந்து கொடுத்தார். விஷம் கலந்தது பற்றி எதுவும் தெரியாததால், கோபாலக்கண்ண் சாப்பாட்டில் மீன் குழம்பை ஊற்றி சாப்பிட்டார். அதிகாலை 5 மணிக்கு அவர் வாயில் நுரை வந்த நிலையில் கிடந்ததை பார்த்து, மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர். எனது மகனை திட்டம் தீட்டி கொலை செய்த விஜயா, அவரது கள்ளக்காதலன் தேவநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா மற்றும் அவரது கள்ளக்காதலன் தேவநாதன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது கடந்த மூன்று மாதமாக கோபால கண்ணன் வேலைக்கு செல்லாத நிலையில் தங்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து தினமும் விஜயாவை அடித்து துன்புறுத்தியதாகவும் மது அருந்திவிட்டு தினமும் விஜயாவை தாக்கியதாகவும் தெரிவித்தனர்.

இதனால் தங்களது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கோபால கண்ணனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி கோபாலக்கண்ணனுக்கு மிகவும் பிடித்த மீன் குழம்பை நேற்று இரவு வைத்ததாகவும் அந்த மீன் குழம்பில் கலக்க விஷத்தை தேவநாதன் விஷம் வாங்கி வந்து கொடுத்ததாகவும், வயலுக்கு அடிக்கப்படும் அந்த பூச்சி மருந்தினை மீன் குழம்பில் கலந்து வைத்துவிட்டு கோபால கண்ணன் தன்னை தாக்குவதாக கூறி பக்கத்து வீட்டில் சென்று விஜயா படுத்து கொண்டதாகவும் அதன் பிறகு காலையில் அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளி கிடப்பதாக அக்கம் பக்கத்தில் கூப்பிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாக விஜயா தெரிவித்தார். இதனால் இந்த கொலைக்கு காரணமான விஜயா மற்றும் தேவநாதனை குள்ளஞ்சாவடி போலீசார் கைது செய்தனர். கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.