மகளிர் உரிமைத் திட்டம் மேல்முறையீடு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

மகளிர் உரிமைத் திட்டம் மேல்முறையீடு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

மகளிர் உரிமைத் திட்டம் மேல்முறையீடு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களின் மேல்முறையீடு தொடர்பான முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 மையங்களில் முகாம் நடைக்கிறது. மேலும், இசேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 30 நாட்கள் முகாம் நடைபெறும். பல பெண்கள் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றி கொடுத்துள்ளனர்.இதனால் அவர்களுக்கு உரிமைத் தாெகை வழங்கப்படவில்லை. இதுபோன்ற குறைவாடுகள் சரி செய்யப்பட்ட பின்னர் உதவித் தொகை வழங்கப்படும் என்றார். 

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வட்டாட்சியர் பிரபாகரன், சிவில் சப்ளை தாசில்தார் ஜான்சன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.