ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர்-புன்னைக்காயல் சாலை அகலப்படுத்தும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம)பராமரிப்பு திருச்செந்தூர் உட்கோட்டம் ஆத்தூர்-புன்னைக்காயல் சாலையை அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் செய்யும் பணியினை மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர்-புன்னைக்காயல் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படுகிறது. ஆத்தூர் புன்னைக்காயல் சாலையை அகலப்படுத்துவதன் மூலம் ஆத்தூர், மேல் சேந்தபூமங்கலம், கீழ சேந்தபூமங்கலம், கைலாசபுரம், புன்னக்காயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், நெடுதஞ்சாலைத்துறை கட்டுமானம் (ப)பராமரிப்பு கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, புன்னைக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஆ.சோபியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.