தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி!

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையப் பகுதியில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணியில், மாப்பிள்ளையூரணி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (31), மனைவி ஹேமா, 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கட்டுமானப் பணியின்போது, ஜெயராஜ் சுமாா் 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.